• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • செப்டிக் ஷாக் காரணமாக பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு..

செப்டிக் ஷாக் காரணமாக பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு..

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமாவில், வென்டிலேட்டர் உதவியுடனே இருந்து வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    செப்டிக் ஷாக் நிலை காரணமாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டு, நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    ராணுவ மருத்துவமனை  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் அவர் கோமாவில், வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: