• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • BREAKING | பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை

BREAKING | பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது

  • Share this:
    முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் நேற்று முன்தினம் இரவு விழுந்துள்ளார். தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து, பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும், மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அகற்றுவதற்காக நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதன்பிறகு, செயற்கை சுவாசத்துடன் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.





    வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: