• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவாவின் புதிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

கோவாவின் புதிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

கோவா முதலமைச்சர்

கோவா முதலமைச்சர்

நேற்று இரவு 11 அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் மிருதுளா சின்ஹா, பரிமோத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் பிரமோத் சாவந்த்.

    முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா மாநில முதல்வராகவும் இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஒரு வருட காலமாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார் மனோகர் பாரிக்கர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    மனோகர் பாரிக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அரசு மரியாதை தகனம் செய்யப்பட்டது.

    இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது சபாநாயகர் பிரமோத் சாவந்த், புதிய முதலமைச்சராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11 அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் மிருதுளா சின்ஹா, பிரமோத் சாவந்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    பாஜக கூட்டணியில் உள்ள கோவா ஃபார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய் மற்றும் மஹாராஷ்ட்ரவதி கோமன்டாக் கட்சியின் சுதின் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். சுயேட்சை கட்சிகளைச் சேர்ந்த இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்

    பாஜக-வின் பலம் 12 ஆக குறைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பலம் 14-ஆக உள்ளது. எனவே, ஆட்சியமைக்க உரிமை கோரி நேற்று முன்தினம் ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம் அளித்தது. கூட்டணி கட்சியில் உள்ளவர்களை தக்கவைக்கும் விதமாகவே 4 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: