• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு!

கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு!

பாரிக்கருடன் பிரமோத் சாவந்த்

பாரிக்கருடன் பிரமோத் சாவந்த்

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் கோவா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, கோவாவைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆலோசனைக்குப் பிறகு, பிரமோத் சாவந்த் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சரும் கோவா மாநில முதல்வராகவும் இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஒரு வருட காலமாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். பல்வேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையிலும், அவரது உடல்நிலை முழுவதுமாக குணமாகவில்லை. உடல்நிலை குன்றிய நிலையில் இருந்த மனோகர் பாரிக்கர் நேற்று காலமானார்.

    பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாநில அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதன்பிறகு, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் கோவா மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அந்தக் கூட்டத்தில் பிரமோத் சாவந்த்தை முதல்வராக தேர்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. சுதின் தாவலிகர், விஜய் சர்தேசாய் ஆகிய இருவரும் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இன்று இரவே, பிரமோத் சாவந்த் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: