• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்த பிரகாஷ்ராஜ்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்த பிரகாஷ்ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ் - கோப்பு படம்

நடிகர் பிரகாஷ்ராஜ் - கோப்பு படம்

தொடர்ச்சியாக, பா.ஜ.க மற்றும் மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவரும் பிரகாஷ் ராஜ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீப காலமாக அரசியல் ரீதியாக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அந்த விவகாரத்தையடுத்து, தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பான கருத்துகளைப் பேசிவருகிறார்.

தொடர்ச்சியாக, பா.ஜ.க மற்றும் மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவருகிறார். இந்தநிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய புதிய பயணத்துக்கு, என்னை உத்வேகப்படுத்தும் வகையில் வரவேற்பளித்ததற்கு நன்றி. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடவுள்ளேன். இதுகுறித்து விரைவில் முழு விவரங்களை தெரிவிப்பேன்’ என்றார்.



Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: