• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடகங்களை நிறுத்துங்கள்! மோடியின் செயலை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ்

நாடகங்களை நிறுத்துங்கள்! மோடியின் செயலை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ்

பிரகாஷ்ராஜ் - நடிகர்

பிரகாஷ்ராஜ் - நடிகர்

கும்பமேளாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவிவிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாட்டின் மிக உயர்ந்த தலைவரே, தேர்தல் காலத்து நாடகங்களை நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடியை பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

    ஏழை விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரப் பிரதேசத்தில் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, பிரயாக்ராஜ் (அலகாபாத்)க்குச் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார். அதன்பிறகு, கும்பமேளாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவிவிட்டார்.

    அவருடைய செயலுக்கு சமூக வலைதளங்களில் ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும், மறுபுறம் நெட்டீசன்கள் வழக்கம்போல மோடியை ட்ரோல் செய்தனர். இந்தநிலையில், மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் பிரகாஷ்ராஜ், இந்தச் செயலையும் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்த பிரகாஷ்ராஜின் ட்விட்டர் பதிவில், ’அன்புக்குரிய நாட்டின் உயர்ந்த தலைவரே, இந்தத் தேர்தல் நாடகங்களை நிறுத்துங்கள். உண்மையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தேவையானது, மரியாதை, பணி பாதுகாப்பு, அவர்களது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம், பாதுகாப்பு உபகரணங்கள்தான். உங்களது நாடகம் தேவையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.



    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: