• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் - புத்தாண்டில் பிரகாஷ் ராஜ் அதிரடி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் - புத்தாண்டில் பிரகாஷ் ராஜ் அதிரடி

நடிகர் பிரகாஷ்ராஜ் - கோப்பு படம்

நடிகர் பிரகாஷ்ராஜ் - கோப்பு படம்

பிரகாஷ் ராஜ் பா.ஜ.கவை மேலும் கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க மதவாதத்தை வளர்க்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கிறது என்று வெளிப்படையாகவே பேசினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த இரு வருடங்களாக பா.ஜ.க அரசையும் மோடியையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். குறிப்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், தனது நெருங்கிய நண்பருமான கௌரி லங்கேஷ் இந்துத்துவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிரகாஷ் ராஜ் பா.ஜ.கவை மேலும் கடுமையாக விமர்சித்தார். பா.ஜ.க மதவாதத்தை வளர்க்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கிறது என்று வெளிப்படையாகவே பேசினார். பல தொலைக்காட்சிகளில் பா.ஜ.க ஆட்சியை விமர்சித்தார்.

இந்த நிலையில், புத்தாண்டு அன்று ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ’எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். அதிக பொறுப்புகளுடன் ஒரு புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் ஆதரவுடன் போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பேன். குடிமகனின் குரல் இனி நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டார்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: