ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 108 கோடி பேருக்கு 216 கோடி டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தயராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் வெறும் 3 விழுக்காட்டினருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்ததற்கு பதில் அளித்துள்ள பிரகாஷ் ஜவடேகர், உலகிலேயே வேகமாக தடுப்பூசி போடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி குறித்து அக்கறை இருந்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குழப்பத்தை தீர்க்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும் என ஜவ்டேகர் கூறியுள்ளார். மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி டோஸ்களை வாங்காமல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்குகிற பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை நிறை வேற்றுவற்கு ஏற்ப, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி, சோதனை மற்றும் வினியோகத்துக்கான விடுவிப்பு ஆகியவற்றுக்கு 120 நாட்கள் ஆகின்றன என்று தெரிவித்துள்ளது.

Must Read : கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் கடந்த கோவை.. பலி எண்ணிக்கை குறையாததால் அதிர்ச்சி!

மேலும், மார்ச் மாதத்தில் உற்பத்திக்கு தயாராகும் தடுப்பூசி தொகுதிகள், ஜூன் மாதத்தில்தான் வினியோகத்துக்கு தயாராகும். கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தயாராக அனுப்புவதற்கு 4 மாதங்கள் ஆகின்ற என்றும் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Prakash Javadekar