ஹோம் /நியூஸ் /இந்தியா /

அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பு உண்டா? வைகோவின் கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்..

அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பு உண்டா? வைகோவின் கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்..

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020/21 ஆம் ஆண்டுக்கான, முதல் மூன்று மாத கால உரிமத் தொகைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் விற்பனைத் தொழிலில் ஏற்பட்டுள்ள  இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, சுங்க வரிக் குறைப்பு செய்யுமாறு கேட்டு  அச்சு ஊடகங்களின் சார்பில், அரசுக்குக் கோரிக்கை வந்துள்ளதா எனவும், அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் விளக்கம் என்ன? என்றும் வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுமா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம் தருக?என கடந்த 14ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். மார்ச், ஏப்ரல் மாதங்களில், இந்திய அச்சு ஊடகக் குழுமங்களிடம் இருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன என்றும்

வருவாய் இழப்பு காரணமாக, அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு  5 விழுக்காடு அடிப்படை சுங்க  வரியை நீக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள் எனவும், இதுகுறித்து, நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி, உரிய முடிவு  எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020/21 ஆம் ஆண்டுக்கான, முதல் மூன்று மாத கால உரிமத் தொகைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

Published by:Gunavathy
First published:

Tags: Mdmk leader vaiko, Prakash Javadekar