கோட்சே தேசபக்தர்! மக்களவையில் ஆ.ராசாவிடம் வாதிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுர்

கோட்சே தேசபக்தர்! மக்களவையில் ஆ.ராசாவிடம் வாதிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா தாகுர்
பிரக்யா தாகுர்
  • News18
  • Last Updated: November 27, 2019, 7:31 PM IST
  • Share this:
மக்களவையில் விவாதத்தின்போது பேசிய பிரக்யா சிங் தாகுர், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஜி திருத்த மசோதா தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, ‘மகாத்மா காந்தியின் மீது நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்ததின் காரணமாக 32 ஆண்டுகள் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்’ என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகுர், ’தேசபக்தர் குறித்து நீங்கள் உதாரணம் கூறக்கூடாது’ என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘நான் என்ன பேசினேன் என்பதை முழுவதும் கேளுங்கள். நாளைக்கு நான் பதிலளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


மக்களவைத் தேர்தலின்போது, கோட்சேவை கமல்ஹாசன் இந்து தீவிரவாதி என்று குறிப்பிட்டிருந்தார். அதுகுறித்து பேசிய பிரக்யா தாகுர், ‘கோட்சே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அவருடைய பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் பிரக்யா தாகுர் அதே கூற்றை வலியுறுத்தியுள்ளார்.

Also see:
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்