ஹோம் /நியூஸ் /இந்தியா /

போபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்

போபால் தொகுதி: திக் விஜய் சிங்கைவிட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பிரக்யா சிங் தாகுர்

பிரக்யா தாகுர்

பிரக்யா தாகுர்

பிரச்சாரத்தின்போதும், பிரக்யாவின் பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, போராடிய உயிரிழந்த வீரர் ஹேம்ந்த் கட்கரே என்னுடைய சாபத்தின் காரணமாகதான் உயிரிழந்தார் என்று பேசினார் பிரக்யா.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவரும் பா.ஜ.க வேட்பாளருமான பிரக்யா தாகுர் சுமார் 41,000 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திக்விஜய சிங்கும், பா.ஜ.க சார்பில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகுர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் பிரக்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிகழ்வு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், பிரச்சாரத்தின்போதும், பிரக்யாவின் பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, போராடிய உயிரிழந்த வீரர் ஹேம்ந்த் கட்கரே என்னுடைய சாபத்தின் காரணமாகதான் உயிரிழந்தார் என்று பேசினார் பிரக்யா. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு, அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். பின்னர், கமல்ஹாசன் பேச்சுக்கு பதிலளித்த பிரக்யா, கோட்சே ஒரு தேசபக்தர் என்றார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வலுவான வேட்பாளராக திக்விஜய் சிங் நிறுத்தப்பட்டிருந்தபோதிலும் அவரைவிட 45,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:

First published:

Tags: Bhopal S12p19