மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா தாகுர்...!

மக்களவையில் மன்னிப்பு கோரிய பிரக்யா தாகுர்...!
பிரக்யா தாகுர்
  • News18
  • Last Updated: November 29, 2019, 2:51 PM IST
  • Share this:
மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று குறிப்பிட்ட பாஜக எம்.பி, பிரக்யா தாகுர், இன்று தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப் படை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ராசா, தேசபக்திக்கு உதாரணமாக கோட்சேவையும், ஜெனரல் டயரைக் கொன்ற உத்தம் சிங்கையும் மேற்கோள் காட்டி பேசினார்.

கோட்சேவை ராசா விமர்சித்தபோது குறுக்கிட்ட பாஜக எம்.பி பிரக்யா தாகுர், தேசபக்தர்களை பற்றி தவறாக பேசக்கூடாது என எழுந்து சத்தமிட்டார். அதற்கு நாடாளுமன்றத்திற்கு வெளியே கடும் எதிர்விளைவுகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படுத்தின, அவரை பயங்கரவாதி எனக் கூறி ராகுல் ட்வீட் செய்தார்.


பிரக்யாவின் கருத்து தவறு என வெளிப்படையாக கண்டித்த பாஜக தலைமை. அவரை பாதுகாப்புக்கான நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. பிரக்யாவின் கருத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் இது தொடர்பாக பிரக்யா விளக்கம் அளித்தார். காந்தி இந்த தேசத்துக்கு அளர்ப்பரிய சேவைகளை தந்ததாக பேசிய அவர், தனது பேச்சால் யாரும் காயப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

மேலும், தான் பொய்யான குற்றச்சாட்டால் வழக்கை சந்திப்பதாகவும், தன்னை தீவிரவாதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (ராகுல் காந்தி) குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.

 
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்