கடந்த 2015ம் ஆண்டு மறைந்த அருண் ஜேட்லி நிதியமைச்சராகப் பதவியேற்ற போது பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவை (Pradhan Mantri Suraksha Bima Yojana- PMSBY) அறிவித்தார். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015-ம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் துவக்கி வைக்கப்பட்டது. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா அதாவது பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் என்பது ஒரு விபத்து காப்பீட்டு திட்டமாகும். நம் சமூகத்தில் வசிக்கும் ஏழை மற்றும் குறைந்த வருமானம் உடைய மக்கள் நன்மை பெற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது.
PMSBY-ல் இணையும் சந்தாதாரர்களுக்கு அரசு விபத்து காப்பீட்டை உறுதி செய்கிறது. இந்த திட்டத்தில் இணையும் மக்களுக்கு 1 வருடத்திற்கு விபத்துகளால் ஏற்படும் மரணம் மற்றும் ஊனத்திற்கு காப்பீடு தொகையை அரசு வழங்குகிறது. பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் இணையும் மக்கள் 1 வருடத்திற்குள் விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும். வங்கியில் சேவிங் அக்கவுண்ட் கொண்ட 18-70 வயதுடையவர்கள் இந்த பிரதமர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். விபத்து காரணமாக ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகள் இத்திட்டத்தில் கவர் ஆகும் அதே நேரத்தில் ஒருவேளை விண்ணப்பதாரர் தற்கொலை செய்து கொண்டால், இந்த திட்டத்தால் அவரது குடும்பத்திற்கு எந்த பண பயனும் கிடைக்காது. இருப்பினும் விண்ணப்பதாரர் கொலை செய்யப்பட்டால் அந்த மரணம் இந்த திட்டத்தின் கீழ் கவர் ஆகும்.

PMSBY
பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
* 18-70 வயதுடைய எந்தவொரு நபரும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.
* ஒருவேளை வங்கியில் ஜாயின்ட் அக்கவுண்ட் (joint bank account) இருந்தால், அதில் இருப்பவர்கள் தனித்தனியாகப் பிரீமியம் தொகை செலுத்தி இந்த திட்டதில் சேரலாம்.
* இந்த திட்டத்தில் NRI-க்களும் சேரலாம். எவ்வாறாயினும் எந்தவொரு உரிமை கோரலுக்கும், பண பலன் இந்திய பணத்தில் (Indian currency) மட்டுமே வழங்கப்படும்.
* பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஒரு வங்கி அக்கவுண்ட்மூலம் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும்.
* விபத்துகள், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் மூலம் ஏற்படும் மரணங்கள் அல்லது ஊனங்கள் இந்த திட்டத்தில் கவர் ஆகும்.
* தற்கொலை காரணமாக ஏற்படும் மரணங்கள் இந்த திட்டத்திலிருந்து விலக்கப்படுகின்றன.
* பகுதி இயலாமை (partial disability) இந்த திட்டத்தின் கீழ் வராது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எப்போது சேர முடியும்?
இந்த காப்பீட்டு திட்டத்தை வங்கி மூலம் மட்டுமே பெற முடியும். பொதுவாக இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை பாலிசி காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்படும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன் :
* விபத்து காரணமாக ஏற்படும் நிரந்தர முழு ஊனம் மற்றும் மரணம் ஆகியவற்றைப் பொறுத்தவரை ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கும்.
* நிரந்தர பகுதி ஊனத்திற்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம்.
* மரணம் அல்லது இயலாமைக்கு வழிவகுக்கும் எந்தவொரு விபத்துகளையும் தொடர்ந்து, மருத்துவமனை செலவினங்களை செலுத்தும் எந்தவொரு திட்டமும் இந்த பாலிஸியில் கிடையாது. சுருக்கமாக சொன்னால் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் மருத்துவ செலவுகளை ஏற்காது.
இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு.?
PMSBY திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுபவர்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.12 ரூபாய் செலுத்தினால் போதுமானது. ஒரு முறை இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டால், ஆண்டுதோறும் பாலிஸிதரரின் வாங்கி கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் பிரீமியம் தொகை (ரூ.12) எடுத்து கொள்ளப்படும். தவிர ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை பாலிசி காலம் கணக்கிடப்பட்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை ஜூன் 1 அல்லது அதற்கு முன் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து பிடிக்கப்படும்.
Also Read:
‘அங்கிள் ஜி’ வேற வேலை தேடுங்க: மேற்குவங்க ஆளுநரை சாடிய பெண் எம்.பி மஹுவா மொய்த்ரா!
பாலிஸி எப்போது டெர்மினேட் அல்லது ரிஸ்ட்ரிக்டட் செய்யப்படும்.?
* பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்த ஒருவர் 70 வயதை அடைந்ததும்
* பாலிஸி எடுத்துள்ள நபரின் வங்கி கணக்கு க்ளோஸ் செய்யப்பட்டால்
* இந்த விபத்து காப்பீட்டை நடைமுறையில் வைத்திருக்க போதுமான பேலன்ஸ் குறிப்பிட்ட வங்கி அக்கவுன்ட்டில் இல்லை என்றால் PMSBY பாலிஸியானது டெர்மினேட் அல்லது ரிஸ்ட்ரிக்டட் செய்யப்படும்.
இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை எப்படி வாங்கலாம்.?
பிரதமரின் இந்த பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் ஏற்கனவே பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் (PSGIC) மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. SMS அல்லது நெட் பேங்கிங் மூலம் இந்த திட்டத்திற்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம். அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நீங்கள் உரிய படிவத்தை டவுன்லோட் செய்து நீங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியை அணுகி பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். அனைத்துப் பெரிய வங்கி நிறுவனங்களின் வங்கி கிளைகளிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது.
Also Read:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒரு மாத சாதனை.. சொன்னதும்... செய்ததும்..
இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்த ஒரு பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர் முதலில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் பேங்க்கின், நெட் பேங்கிங்கில் உள்நுழைந்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு நபர் ஒரு வங்கி கணக்கு மூலம் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை ஜூன் 1 அல்லது அதற்கு பிறகு பிறகு ஒரு நபர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், காப்பீட்டுத் தொகை பிரீமியம் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்பட்ட தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை செல்லுபடி ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.