ஹோம் /நியூஸ் /இந்தியா /

Watch: 'பகலில் உணவகத்தில் வேலை; ராணுவத்தில் சேர இரவில் 10 கி.மீ ஓட்டம்' - இளைஞரின் வீடியோ Viral

Watch: 'பகலில் உணவகத்தில் வேலை; ராணுவத்தில் சேர இரவில் 10 கி.மீ ஓட்டம்' - இளைஞரின் வீடியோ Viral

ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 80 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் லைக் செய்ததுடன், 85 ஆயிரம்பேர் ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள்.

ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 80 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் லைக் செய்ததுடன், 85 ஆயிரம்பேர் ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள்.

ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 80 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் லைக் செய்ததுடன், 85 ஆயிரம்பேர் ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  குடும்ப சூழல் காரணமாக உணவகத்தில் பகலில் வேலை பார்க்கும்  இளைஞர், ராணுவத்தின் சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க இரவில் தினமும் 10 கி.மீ தூரம் ஓடுகிறார். அதை காலையில் செய்யலாமே என்று கேட்பவருக்கு இளைஞர் அளிக்கும் பதில் நெஞ்சைத் தொடும் வகையில் உள்ளது.

  பாலிவுட் இயக்குனர் வினோத் காப்ரி வெளியிட்டுள்ள வீடியோதான் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் அதிகம் பகிரப்பட்டுள்ளது. இதை பிரபல நடிகை காஜல் அகர்வால் உள்பட ஏராளமானோர் பகிர்ந்துள்ளனர்.

  அதில் வினோத் காப்ரிக்கும் 19 வயதாகும் இளைஞர் பிரதீப் மெஹ்ராவுக்கும் இடையிலான உரையாடல் விபரம், ‘டெல்லி அருகேயுள்ள நொய்டா பரேலாவில் இளைஞர் பிரதீப் மெஹ்ரா நள்ளிரவில் தினமும் ஓடுகிறார். இதை சிலமுறை பார்த்த காரில் வரும் வினோத் காப்ரி, வீட்டில் இறக்கிவிடவா என்று கேட்கிறார். இளைஞர் வேண்டாம் என்று தவிர்த்து விட, ஒருநாள் வினோத் காப்ரி விவரத்தை கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்கிறார்.

  செக்டர் 16 பகுதியில் உள்ள மெக் டோனல்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கும் பிரதீப் பணி முடிந்ததும் பரோலாவில் உள்ள வீட்டிற்கு 10 கிலோ மீட்டர் தூரம் ஓடியே செல்கிறார். 'நான் காரில் வீட்டில் விடவா' என்று வினோத் காப்ரி கேட்கும்போது, 'வேண்டாம், அப்படிச் செய்தால் எனக்கு ஓடுவதற்கு நேரம் கிடைக்காது' என்று பிரதீப் பதில் அளிக்கிறார்.

  எதற்காக ஓடுகிறாய் என்று வினோத் உரையாடலை தொடர்கிறார். 'ராணுவத்தில் சேர்வதற்காக ஓடுகிறேன். எனது பெயர் பிரதீப் மெஹ்ரா, உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்தவன்.' என்று பிரதீப் பதில் அளிக்கிறார்.

  காலையில் ஓட முடியாதா? நள்ளிரவில் ஏன் ஓடுகிறாய் என்று வினோத் கேள்வி எழுப்ப, 'காலையில் நான் வேலைக்கு செல்ல வேண்டும். கூடவே சமையலும் செய்ய வேண்டும். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. நான் எனது சகோதரனுடன் இருக்கிறேன்.' என்கிறார் பிரதீப்.

  பிரதீப்பின் ஓட்டத்தை வீடியோவில் வினோத் ரிக்கார்டு செய்து கொண்டே, இந்த வீடியோ வைரலானால் என்ன நினைப்பாய் என்று கேட்கிறார். அதற்கு, 'என்னை யார் பாராட்டப் போகிறார்கள்? வைரலானால் பரவாயில்லை. நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறேன்' என்று பிரதீப் பதில் அளிக்கிறார்.

  2 நிமிடம் ஓடும் இந்த வீடியோ வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 'பிரதீப் நீ ஒரு அற்புதமான ஆள்' என்று வினோத் பாராட்டுகிறார். கடைசியாகவும், நான் உன்னை வீட்டில் டிராப் செய்யவா என்று வினோத் கேட்க, 'உங்களுடன் காரில் வந்தால் எனது ஓட்டப் பயிற்சி பாதிக்கப்பட்டு விடும். நான் ஓடியே வீட்டிற்கு செல்கிறேன்' என்று ஓடிக்கொண்டே பதில் அளித்தார் பிரதீப்.

  இளைஞனுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லும் வினோத் காப்ரி, இந்த வீடியோவை கட்டாயமாக உங்களது குழந்தைகளுக்கு காண்பியுங்கள் என்ற வேண்டுகோளை கடைசியில் வைக்கிறார். ட்விட்டரில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 80 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் லைக் செய்ததுடன், 85 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள். மேலும் பிரபலங்கள் பலரும் பகிர்ந்ததால் வீடியோ வைரலாகியுள்ளது.

  இதனை ரீ ட்வீட் செய்துள்ள முன்னணி நடிகை காஜல் அகர்வால், பிரதீப் நீ எங்கிருந்தாலும் உனக்காக எனது அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

  குடும்பத்தையும் பார்க்க வேண்டும், லட்சியத்தையும் விட்டு விடக் கூடாது, துளியும் நேரத்தை வீணடிக்க கூடாது, இலக்கை அடையும் வரை ஓய்வில்லை என்பது உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை இந்த 2 நிமிட வீடியோ உணர்த்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Indian army, Trending Video, Viral Video