ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரே நேரத்தில் 4 திருமணம் - மின்வெட்டால் மாறிப்போன ஜோடி... திருமண வீட்டில் பரபரப்பு...

ஒரே நேரத்தில் 4 திருமணம் - மின்வெட்டால் மாறிப்போன ஜோடி... திருமண வீட்டில் பரபரப்பு...

ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமணம் நடைபெற்ற காரணத்தால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு தொடர்ந்து வருவது பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் மின்வெட்டு காரணமாக திருமண விழாவில் மணமக்கள் ஜோடி மாறிப்போன விபரீதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் நடைபெற்ற குடும்ப திருமண விழாவில் நான்கு திருமணங்கள் ஒன்றாக நடைபெறவிருந்தது.

உஜ்ஜைன் மாவட்டத்தின் பட்னாகர் பகுதியின் அஸ்லானா என்ற கிராமத்தில் வசித்துவருபவர் ரமேஷ். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளார். இவர்கள் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அங்கு அடிக்கடி மின்வெட்டு நிகழ்ந்து வரும் நிலையில், நான்கு மணமக்களில் இரண்டு மணமக்கள் ஆட்கள் மாறி தவறாக அமர்ந்துள்ளனர். ரமேஷுக்கு கோமல், நிக்கிதா, கரிஷ்மா என மூன்று மகள் உள்ள நிலையில், இதில் நிகித்தா மற்றும் கரிஷ்மா ஆகிய இருவர் தான் ஜோடி மாறி அமர்ந்துள்ளனர்.

மாறிப்போன ஜோடியை வைத்து மந்திரம் மற்றும் சடங்குகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்த பின் ஜோடி மாறிப்போனதை பார்த்து குடும்பத்தினர் பதறியுள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் சரியான ஜோடியை அமர வைத்து சடங்குகளை மீண்டும் செய்ய வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திருமணமான 36 நாள்களிலேயே காதலனுக்காக கணவரை கொன்ற மனைவி

ஜோடிகள் ஒரே விதமாக உடை அணிந்திருந்ததும் இந்த குழப்பத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த குழப்பத்தால் முதலில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பின்பு நிலைமை சமாளிக்கப்பட்டு, திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

First published:

Tags: Marriage Problems, Power cut, Power Shutdown