ஹோம் /நியூஸ் /இந்தியா /

மின் தடையால் டெல்லி மெட்ரோ சேவை முடங்கும் அபாயம் : நிலக்கரியை விரைந்து வழங்க அமைச்சர் கோரிக்கை

மின் தடையால் டெல்லி மெட்ரோ சேவை முடங்கும் அபாயம் : நிலக்கரியை விரைந்து வழங்க அமைச்சர் கோரிக்கை

டெல்லி மெட்ரோ ரயில் சேவை.

டெல்லி மெட்ரோ ரயில் சேவை.

அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை மத்திய அரசு வழங்க வேண்டும் - அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மின் தடையால் டெல்லி மெட்ரோ சேவை முடங்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டி, நிலக்கரியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள அனல் மின் நிலையங்களில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பான ஆவசர ஆலோசனை கூட்டம் டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரியை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் தாத்ரி - II மற்றும் உஞ்சஹார் மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளதால், டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க - 38 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு - தடை செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?

டெல்லியை சுற்றியுள்ள தாத்ரி-II, உஞ்சஹார், கஹல்கான், ஃபராக்கா மற்றும் ஜஜ்ஜார் மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு நாளைக்கு 1751 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகின்றன. குறிப்பாக தாத்ரி-II மின் நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 728 மெகாவாட்டும், உஞ்சஹார் மின் நிலையத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரம் டெல்லிக்கு கிடைக்கிறது.

டெல்லியின் 25 முதல் 30 சதவீத மின் தேவையை தாத்ரி - II மற்றும் உஞ்சஹர் பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த இரு அனல் மின் நிலையங்களிலும் இரண்டு தினங்களுக்கு நிலக்கரி இருப்பு மட்டுமே உள்ளது. இந்த மின் நிலையங்களுக்கு தொடர் நிலக்கரி விநியோகம் செய்யாவிட்டால், டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மெட்ரோ ரயில் சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என சத்யேந்த்ர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ரஷியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி: இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

மேலும், மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் டெல்லி அரசால் மேற்கொள்ளப்பட்டாலும், நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகரின் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

எனவே டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

Published by:Musthak
First published:

Tags: Delhi, Power cut