Home /News /national /

RRB NTPC | தயவு செய்து தேர்வு பெயரை மாற்றுங்கள்.. குளறுபடியில் சிக்கிய தேசிய அனல் மின் கழகம் ரயில்வேக்கு வேண்டுகோள்!

RRB NTPC | தயவு செய்து தேர்வு பெயரை மாற்றுங்கள்.. குளறுபடியில் சிக்கிய தேசிய அனல் மின் கழகம் ரயில்வேக்கு வேண்டுகோள்!

RRB NTPC | ரயில்வே தேர்வு சர்ச்சையில் தவறுதலாக NTPC லிமிடெட் நிறுவத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

RRB NTPC | ரயில்வே தேர்வு சர்ச்சையில் தவறுதலாக NTPC லிமிடெட் நிறுவத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

RRB NTPC | ரயில்வே தேர்வு சர்ச்சையில் தவறுதலாக NTPC லிமிடெட் நிறுவத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

    ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் (RRB-NTPC) தேர்வின் பெயரை மாற்றும்படி, தேசிய அனல்மின் கழகம் (NTPC லிமிடெட்) ரயில்வே அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கடந்த 2021ம் ஆண்டு ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்காக நடந்த தேர்வின் முடிவுகள் (RRB-NTPC) ஜனவரி 15ம் தேதி வெளியாகின. 35,000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வில், 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த வேலைக்கான சம்பளம் ரூ.19,900ல் இருந்து ரூ.35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரு தேர்வு தான் என்று நினைத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், இரண்டாம் நிலை தேர்வும் இருக்கிறது என ரயில்வே வாரியம் அறிவித்தது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பீகார் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் படிக்க...  ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

    தொடர்ந்து, வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மாணவர்களின் போராட்டத்தால் தேர்வை ரயில்வே வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், மாணவர்களின் கருத்துகளை கேட்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான (RRB-NTPC) தேர்வு சர்ச்சையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC லிமிடெட் நிறுவனத்தின் பெயர் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்படுவதால் தங்களது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக அந்நிறுவனம் ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தேசிய அனல்மின் கழகத்தின் (NTPC லிமிடெட்) நிர்வாக இயக்குனர் பாட்டாமிஸ்ரா எழுதிய கடிதத்தில், ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்காக நடந்த தேர்வின் முடிவுகள் (RRB-NTPC) தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக நாங்கள் நம்புகிறோம். இந்த சூழ்நிலையில், ரயில்வே தேர்வு சர்ச்சையில் தவறுதலாக NTPC லிமிடெட் நிறுவத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

    ஊடகங்கள் NTPC தேர்வு என்ற சுருக்கமான வடிவத்தையே பயன்படுத்தி வருகின்றன. இதனால், இந்த தேர்வு நாட்டின் மிகப்பெரிய அனல்மின் உற்பத்தி நிறுவனமான NTPC-யுடன் தொடர்புடைய தேர்வு என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

    இது எங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம். அதனால், இனி ரயில்வே தேர்வு தொடர்பாக வெளியிடப்படும் செய்தி அறிக்கையில், NTPC என்று சுருக்கமாக குறிப்பிடுவதற்கு பதிலாக முழுமையாக குறிப்பிட்டு, பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படும் பெயர் குளறுபடிகளை தவிர்க்கலாம்.

    எனவே, இனி வரும்காலங்களில் குழப்பம் ஏற்படாத வகையில், இந்த தேர்வுகளின் பெயர்களை மாற்றி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Indian Railways, Railway

    அடுத்த செய்தி