புதிய நாடாளுமன்றம் கட்டுவதை ஒத்திவைக்கலாம் - மோடி அரசுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்..!

25,000 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்கு தள்ளிவைக்கலாம்“ என்று அறிவுறுத்தி உள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவதை ஒத்திவைக்கலாம் - மோடி அரசுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்..!
சுப்பிரமணியன் சுவாமி.
  • Share this:
கொரோனா நிவாரணத்திற்காக எம்.பி-களின் உதியம் ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடிப்பதை வரவேற்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி மோடி அரசுக்கு தனது அறிவுரையையும் வழங்கி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் பொது நிவாரணத்தில் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து எம்.பி-களின் ஊதியத்திலிருந்து 30 சதவீதம் ஓராண்டு பிடிக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.


பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவிற்கு தனது வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்து கொண்டார். மேலும் “இதே போன்று 25,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்கு தள்ளிவைக்கலாம்“ என்று அறிவுறுத்தி உள்ளார்.













சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading