குறைவான விலைக்கு சாராயம்... சோடா, கலர் இலவசம் - போஸ்டரால் பரபரப்பு

புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு அரசின் ஆலை மூலம் சாராயம் விநியோகிக்கப்படும் நிலையில், மூலப்பொருள் விலையேற்றம் காரணமாக, விலை உயர்த்தப்பட்டுள்ளது.

news18
Updated: July 5, 2019, 6:05 PM IST
குறைவான விலைக்கு சாராயம்... சோடா, கலர் இலவசம் - போஸ்டரால் பரபரப்பு
சாராயம்
news18
Updated: July 5, 2019, 6:05 PM IST
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் குறைவான விலைக்கு சாராயம் விற்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு அரசின் ஆலை மூலம் சாராயம் விநியோகிக்கப்படும் நிலையில், மூலப்பொருள் விலையேற்றம் காரணமாக, விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 41 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் சாராயம், 47 ருபாயாக உயர்ந்துள்ளது.

சாராயத்தின் விலையை புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ள நிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் சாராயகடை ஒன்றில் குறைந்த விலைக்கு சாராயம் விற்கப்படுவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 50 மில்லி 5 ரூபாய், கால் பாட்டில் 20 ரூபாய், முழு பாட்டில் 25 ரூபாய் என விலை குறைத்து விற்கப்படுவதாக போஸ்டர் ஒட்டபட்டுள்ளது.

இலவச இணைப்பாக சோடா, கலர் கிடைக்கும் என்றும் அந்த போஸ்டரில் வாசகம் இடம்பெற்றிருப்பது குடி மகன்களை உற்சாகமடைய செய்துள்ளது.Also watch

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...