ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி மீண்டும் நடைபெறும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையிலும், தபால் துறை தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை தாக்கல் செய்தது.

news18
Updated: July 31, 2019, 10:42 AM IST
ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி மீண்டும் நடைபெறும்!
மாதிரிப் படம்
news18
Updated: July 31, 2019, 10:42 AM IST
நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.


இதையடுத்து தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 14-ம் தேதி நடைபெற்ற தபால் துறை எழுத்துத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையிலும், தபால் துறை தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை தாக்கல் செய்தது.

Loading...

இந்நிலையில், நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால் துறைத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும், தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...