• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லாக்டவுனில் 100 டன்னுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை டெலிவரி செய்தது தபால்துறை..!

லாக்டவுனில் 100 டன்னுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை டெலிவரி செய்தது தபால்துறை..!

அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்களையும், உணவுப் பொட்டலங்களையும் வழங்குவதையும் தபால் துறை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், நாடு முழுவதும் 100 டன்னுக்கும் அதிகமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சில பொருட்களை தபால்துறை விநியோகித்தாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை இணை செயலர் புன்ய சாலிய ஸ்ரீவஸ்தவா, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் 100 டன்னுக்கும் அதிகமான மருந்துகள், பரிசோதனைக் கருவிகளை மருத்துவமனைகளுக்கும், பயனாளர்களுக்கும், வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தபால்துறை விநியோகித்தது என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் கீழ் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான தபால் ஊழியர்கள், தபால்காரர்கள் பணியாற்றுகிறார்கள். அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்டவை, பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க, அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் நடமாடும் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்களையும், உணவுப் பொட்டலங்களையும் வழங்குவதையும் தபால் துறை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: