• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன்: நவ்ஜோத் சித்து

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன்: நவ்ஜோத் சித்து

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன்: நவ்ஜோத் சித்து

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன்: நவ்ஜோத் சித்து

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதன்காரணமாக கடந்த 18-ம் தேதி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து குறித்தும், காங்கிரஸ் தலைமை மீதுமான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தான் அவமானத்தை சந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதன் பின்னர், எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை, சரஞ்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் மாநில முதல்வராக தேர்ந்தெடுத்தது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்.

    இந்த சூழலில் கடந்த 28-ம் தேதி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். பஞ்சாபின் எதிர்காலம், நலனில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சித்து விளக்கம் அளித்தார்.

    இதனிடையே, பஞ்சாப் மாநில காவல் துறை தலைவர், மாநில தலைமை அரசு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்று சித்து பகிரங்கமாக வலியுறுத்தி வந்தார். இதனால், சித்துவை சமாதானப்படுத்த தன்னை சந்திக்க வருமாறு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று சண்டிகரில் முதல்வரை சித்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. எனினும், இந்த சந்திப்பில், முதல்வருக்கும் சித்துவுக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என கூறப்பட்டது.

    இந்நிலையில், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "காந்திஜி மற்றும் லால் பகதூர் சாஸ்திரிஜியின் கொள்கைகளை நிலைநிறுத்துவேன், என்றும், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

    மேலும், அனைத்து எதிர்மறை சக்திகளும் என்னை தோற்கடிக்க முயற்சிக்கட்டும், ஆனால் ஒவ்வொரு நேர்மறை ஆற்றலும் பஞ்சாப்பை வெல்லச் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: