Home /News /national /

மத்திய அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பு - அசாமில் பரபரப்பு

மத்திய அமைச்சர் பங்கேற்ற விழாவில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பு - அசாமில் பரபரப்பு

Assam Porn Clip Shocker:  மத்திய அமைச்சர் ராமேஸ்வர் பங்கேற்ற நலத்திட்ட விழா ஒன்றில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அசாம் மாநிலம் டின்சுகியா என்ற பகுதியில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி வருகை தந்துள்ளார். அங்குள்ள இந்திய ஆயில் நிறுவனத்தில் மெத்தனால் கலந்த எம்-15 ரக பெட்ரோல் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்நிகழ்வில் நிதி ஆயோக் உறுப்பினர் விகே சரஸ்வத், இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா, மாநில அமைச்சர் சஞ்சோய் கிசான் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தொடக்க விழா அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான விளக்கங்களுடன் கூடிய காணொளியை ஒளிபரப்ப அங்கு ப்ரொஜெக்ட்டர் திரை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திட்டத்தை தொடங்கி வைத்து விருந்தினர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, மேடையில் உள்ள திரையில் திடீரென தவறுதலாக ஆபாச பட காட்சிகள் ஓடியுள்ளன. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில வினாடிகள் காட்சி ஓடிய நிலையில், ஆப்பரேட்டிரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வீடியோ நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ப்ரொஜெக்ட்டர் ஆபரேட்டரை கைது செய்த காவல்துறை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

    இது குறித்து பேசிய அமைச்சர் ராமேஸ்வர், 'நான் விருந்தினர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் திரையை கவனிக்கவில்லை. அப்போது எனது உதவியாளர் அருகே வந்து நிகழ்ந்ததை தெரிவித்தார். நான் அருகே இருந்த காவல் ஆணையரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன். ஆபரேட்டரிடம் குற்றம் இருப்பது விசாரணையில் வெளிவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam

    அடுத்த செய்தி