முகப்பு /செய்தி /இந்தியா / “மக்கள் தொகை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்”... விநோத காரணம் சொன்ன மத்திய அமைச்சர்..!

“மக்கள் தொகை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்”... விநோத காரணம் சொன்ன மத்திய அமைச்சர்..!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

மக்கள் தொகை உயர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளாதல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.

ஆளும் பாஜக விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி கர்நடாகவின் ஹசன் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேர்தல் பரப்புரையில் பேசிய பிரகலாத் ஜோஷி கூறியதாவது,  “நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு மின்சார வசதியைக் கூட கொண்டு சேர்க்கவில்லை. கிராமங்களுக்கு மின்சார வசதியே அப்போது இல்லை. பிரதமர் மோடியின் வருகைக்கு பின்னர் தான் அனைவருக்கும் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கிறது.

காங்கிரஸ் கட்சி மின்சாரம் முறையாக வழங்காததால் தான் நாட்டின் மக்கள் தொகை அதிகரித்தது. இவர்கள் தான் மக்களுக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறுகின்றனர்.இது எப்படி சாத்தியம் என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மக்களுக்கு மின்சாரம் தராததால் தான் மக்கள்தொகை அதிகரித்தாக மத்திய அமைச்சர் பேசியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. அமைச்சரின் கருத்து மிகவும் மோசமானது என காங்கிரஸார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Congress, Electricity, Karnataka, Population