Home /News /national /

7 கண்டங்களின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த இந்திய பெண் பூர்ணா

7 கண்டங்களின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த இந்திய பெண் பூர்ணா

உலகின் 7 உயமான மலைகளை ஏறி சாதனை படைத்த பூர்ணா

உலகின் 7 உயமான மலைகளை ஏறி சாதனை படைத்த பூர்ணா

Mountain climbing record: மலையேறும் வீராங்கனை பூர்ணா மாலாவத், ஏழு கண்டங்களில் அமைந்துள்ள ஏழு உயரமான சிகரங்களை ஏறி வரலாறு படைத்துள்ளார்

தெலுங்கானாவைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை பூர்ணா மாலாவத், ஏழு கண்டங்களில் அமைந்துள்ள ஏழு உயரமான சிகரங்களை ஏறி வரலாறு படைத்துள்ளார். வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான மலையான தெனாலி மலை (6,190 மீட்டர்) - ஏழாவது மலையில் ஏறி அவர் இந்த சாதனையை ஜூன் 5 அன்று முடித்துள்ளார்.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் பக்லா கிராமத்தில் ஜூன் 10 2000 அன்று பிறந்தவர் தான் பூர்ணா மாலாவத். அவர் தனது கல்விக்காக தெலுங்கானா சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கத்தில் சேர்ந்தார். இவரது திறமையை சங்கத்தின் செயலாளர் டாக்டர் ரெபள்ளே சிவ பிரவீன் குமார் ஐ.பி.எஸ்.கண்டறிந்தார். ஆபரேஷன் எவரெஸ்டுக்கு அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள். எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கான பயிற்சியின்போது லடாக் மற்றும் டார்ஜிலிங் மலைகளில் அவர் மலையேற்றம் செய்தார். அங்கு தொடங்கியது இந்தப்பயணம்.



உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை 2014 ஆம் ஆண்டு மே மாதம் தனது 13-வது வயதில் ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற சாதனையை பூர்ணா ஏற்கனவே படைத்துள்ளார். இவரது பயிற்சியாளர் சேகர் பாபு.

தற்போது 22 வயது ஆகும் பூர்ணா 2014 இல் எவரெஸ்ட் (ஆசியா), 2016 இல் கிளிமஞ்சாரோ மலை (ஆப்பிரிக்கா), 2017இல் எல்ப்ரஸ் மலை (ஐரோப்பா), 2019 இல் அகோன்காகுவா (தென் அமெரிக்கா), மவுண்ட் கார்டென்ஸ் பிரமிட் (ஓசியானியா), வின்சன் (அண்டார்டிகா) மலை மற்றும் 2022 மே மாதம் மவுண்ட் தெனாலி (வட அமெரிக்கா) ஆகிய மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார்.

பப்ஜி விளையாட்டில் தோல்வி - உயிரை விட்ட மாணவன்.. பரிதாப சம்பவம்

பூர்ணாவின் எவரெஸ்ட் சாதனையை மையமாக வைத்து ஹிந்தி இயக்குனர் ராகுல் போஸ் 2017 இல் Poorna: Courage Has No Limit என்ற தலைப்பில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இது காலிஃபோர்னியாவின் பாம் ஸ்ப்ரிங் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு 30 சிறந்த படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியா சுயமாக உருவாகி சாதனை
படைக்கும் பெண்களின் பட்டியலில் பூர்ணா இடம்பெற்றார்.




பூர்ணா மாளவத் தற்போது ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Mount Everest, Women achievers, World record

அடுத்த செய்தி