ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க சிறப்பு மையங்கள் - கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க சிறப்பு மையங்கள் - கேரள அரசு அறிவிப்பு
பினராயி விஜயன்
  • Share this:
கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் ஃபோன் இல்லாததால், தேவிகா எனும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது அம்மாநிலம் முழுக்க மாணவர் போராட்டத்தையும்  நாடு முழுக்க கடும் விமர்சனங்களையும் உருவாக்கியது.

இந்தப் பிரச்னை குறித்து காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கூட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதினார். ஏழை மக்களுக்கு இணையவசதியை உறுதி செய்யவில்லையென்றால் அது கல்வியில்  சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வசதியில்லாத ஏழை எளிய மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகளுக்கான மையங்கள் கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ளன. நூலகங்கள், அங்கன்வாடி மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அங்கு சென்று ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் கேரள கல்வித்துறை அறிவித்துள்ளது.


Also see:

First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading