கர்நாடகாவில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்!

குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயம் செய்வதும் மிகச்சிரமமாக உள்ளது.

கர்நாடகாவில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்!
கோவில்களில் நடந்த பூஜை
  • News18
  • Last Updated: June 7, 2019, 4:17 PM IST
  • Share this:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க வேண்டி அரசு உத்தரவின்படி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக தென்மாநிலங்களின் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயம் செய்வதும் மிகச்சிரமமாக உள்ளது.

கர்நாடகாவில் உள்ள பல அணைக்கட்டுகள் வறண்டு போயுள்ளன. இதனால், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க வேண்டி அம்மாநில அரசு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிட்டது.


அரசு உத்தரவின் பெயரில் உடுப்பி, ஹலசுரூ கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. உடுப்பியில் நடந்த பூஜையில் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

கடவுள் கருணையால் விரைவில் மழை வந்து மக்களின் பிரச்னைகள் தீரும் என்று சிவக்குமார் கூறினார்.தமிழகத்திலும் கடந்த மாதம் அரசு உத்தரவின் பெயரில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், மழை வேண்டி யாகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading