ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் பரபரப்பாக நடைபெற்ற மாடு பிடிக்கும் போட்டி: 8 பேர் காயம்!

திருப்பதியில் பரபரப்பாக நடைபெற்ற மாடு பிடிக்கும் போட்டி: 8 பேர் காயம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

இதற்கு தனிப்பட்ட நிபந்தனைகள் எதுவும் கிடையாது. எத்தனை மாடுகளையும் ஒரே சமயத்தில் ஓட விடலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக கலாச்சாரத்தை ஒட்டி ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுபிடி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்.

அப்போது விவசாயிகள் தங்களிடம் இருக்கும் எருதுகள், பசுக்கள் ஆகியவற்றை அலங்கரித்து, கொம்புகளில் பலகை மற்றும் பணம் ஆகியவற்றை கட்டி பலமான பறை சப்தம், பொதுமக்களின் ஆர்ப்பரிப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிட்ட வீதியில் ஓட விடுவார்கள். அப்போது வீதியின் இரண்டுப்புறங்களிலும் காத்திருக்கும் இளைஞர்கள் மாடுகளை விரட்டி பிடிப்பார்கள்.

இதற்கு தனிப்பட்ட நிபந்தனைகள் எதுவும் கிடையாது. எத்தனை மாடுகளையும் ஒரே சமயத்தில் ஓட விடலாம் . அதேபோல் மாட்டை எத்தனை பேரும் பிடிக்கலாம். அப்படி மாடுகளை பிடித்து அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் பலகை, பரிசு

பொருட்கள் ஆகியவற்ற இளைஞர்கள் எடுத்து செல்வார்கள்.

இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் ரங்கம் பேட்டை கிராமத்தில் இன்று ஆந்திராவின் புகழ்பெற்ற மாடுபிடி போட்டு நடைபெற்றது. அப்போது அலங்காரிக்கப்பட்ட கொம்புகளில் பணத்தால் மற்றும் பலகை ஆகியவற்றுடன் பாய்ந்து வந்த மாடுகளை இளைஞர்கள் போட்டி போட்டு பிடித்து கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பணத்தை பரிசாக எடுத்துச் சென்றனர். மாடு பிடி போட்டியை முன்னிட்டு ரங்கம்பேட்டை கிராமத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் போட்டியின் போது மாடுகள் முட்டி, தள்ளி, ஏறி மிதித்ததில் எட்டு பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

First published:

Tags: Jallikattu