ஹோம் /நியூஸ் /இந்தியா /

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடி அதிகாரி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடி அதிகாரி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!

தேர்தல்

தேர்தல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கெர், மஹாசமுந்த் மற்றும் ராஜ்னண்ட்காவ் என்ற மூன்று தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வந்த அதிகாரி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

  சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மக்களைவைத் தொகுதிக்கு உட்பட்ட 186-வது வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வந்த அதிகாரி ஒருவர் திடீர் மாரடைப்பால் இறந்ததார். இதனால் சற்று நேரம் அந்த வாக்குச்சாவடியில் வாக்குபதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கெர், மஹாசமுந்த் மற்றும் ராஜ்னண்ட்காவ் என்ற மூன்று தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

  இன்று காலை 9 மணிவரையில் சட்டிஷ்கரில் 11 சதவீத வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 மக்களவைத் தொகுதிகளுள்ள நிலையில் முதற்கட்ட வாக்குபதிவில் பாஸ்தார் தொகுதிக்கான தேர்தல் முடிந்தது. 3 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

  மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Chattisgarh, Chhattisgarh Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha Election 2019