ஹோம் /நியூஸ் /இந்தியா /

10 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்தி வந்த புலியை பிடித்த வனத்துறை... காட்டிற்குள் விட்டதும் உயிரிழந்த சோகம்

10 பசுக்களை கொன்று மக்களை அச்சுறுத்தி வந்த புலியை பிடித்த வனத்துறை... காட்டிற்குள் விட்டதும் உயிரிழந்த சோகம்

புலி உயிரிழப்பு

புலி உயிரிழப்பு

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை வனத்துறையினர் பிடித்து காட்டிற்குள் விட்ட சில நாட்களில் புலி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pollachi, India

  கேரள மாநிலம் மூணாறு நயமைக்காடு எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பத்து பசுக்கள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளை கொன்று மக்களை அச்சுறுத்தி வந்தது.

  இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் புலியை பிடிக்க 4 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

  இந்நிலையில் வனத்துறையினர் வைக்கப்பட்ட கூண்டில் கடந்த 4ம் தேதி இரவு புலி சிக்கியது. கூண்டில் சிக்கிய புலியை பரிசோதித்த வன கால்நடை மருத்துவர்கள் புலியின் இடது கண் பார்வை செயலிழந்து இருப்பது தெரியவந்தது. இதனால் மூணாறு பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இரண்டு நாட்கள் வைத்து புலியை கண்காணித்தனர்.

  இதனைத் தொடர்ந்து புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக முல்லைக்கொடி அடர்ந்த வனப்பகுதிக்கு வாகனத்தின் மூலம் கொண்டு சென்று விட்டனர். புலியின் இடது கண் பார்வை குறைபாடு உள்ள காரணமாக சேட்டிலைட் மூலம் புலியை கண்காணிக்கும் வகையில் புலியின் கழுத்தில் காலர் ஐடி பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

  Also see... பழையாறு அருகே சிதறிக்கிடந்த எலும்புக்கூடுகள்... போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சேட்டிலைட் சிக்னல் காட்டாமல் இருந்ததால் வனத்துறையினர் புலியை அப்பகுதியில் தேடினர். அப்போது முல்லைக்கொடி அருவி ஓடை அருகே முல்லை ஆற்றில் புலி மூழ்கி இறந்து கிடந்தது வனத்துறைக்கு தெரிய வந்தது.

  இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புலியின் உடலை தேக்கடி வன அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் புலி முள்ளம்பன்றியை சாப்பிட்டதால் வாய், கழுத்து மற்றும் முகம் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆற்றில் விழுந்த புலி நீந்த முடியாமல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கேரள மாநிலம் மூணாறு வனச்சரக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Dead, Pollachi, Tiger