ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியின் நம்பிக்கை
காங்கிரஸ் தான், கோவா மக்கள் அல்ல என்று சூசகமாக கிண்டல் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸைத் தாக்கிப்பேசும்போது, பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் பாரதிய ஜனதா கட்சியின் பெரிய நம்பிக்கையே தவிர கோவா மக்கள் அல்ல என்று கூறினார்.
திங்களன்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் ட்வீட்டிற்கு எதிர்வினையாக கெஜ்ரிவால் கருத்துக்கள் வந்தன. அதாவது ஆம் ஆத்மியும் திரிணாமுல் காங்கிரஸும் பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கு மட்டுமே உதவுகின்றன, இது காவி கட்சிக்கு உதவுகின்றது. இதை அரவிந்த் கெஜ்ரிவால் "உறுதிப்படுத்தியுள்ளார்" என்றார்.
கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் மூத்த தேர்தல் பார்வையாளராக இருக்கும் சிதம்பரம், கோவா வாக்காளர்களிடத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து காங்கிரஸைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வழங்கவில்லை எனில் கூட்டணி ஆட்சியில் ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் கூறும்போது, “அழுகையை நிறுத்துங்க சிதம்பரம் சார். கோவா மக்கள் நம்பிக்கையை எங்கு பார்க்கிறார்களோ அங்கு வாக்களிப்பார்கள். “பாஜகவுக்கு பெரிய நம்பிக்கையே காங்கிரஸ்தான், கோவா மக்கள் அல்ல. உங்களின் 17 எம்எல்ஏக்களில் 15 பேர் பாஜகவுக்கு மாறினர். காங்கிரஸுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாதுகாப்பாக பாஜகவுக்குச் செல்லும் என்பதை காங்கிரஸ் உறுதி செய்து வருகிறது. ஆகவே பாஜகவுக்கு வாக்களிப்பதை காங்கிரஸ் மூலம் பாதுகாப்பாக செய்யலாம்” என்று காங்கிரஸ் கட்சியையும் ப.சிதம்பரத்தையும் விமர்சித்து பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.