ஹோம் /நியூஸ் /இந்தியா /

CBSE Exam | சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: வலுக்கும் கண்டனம்

CBSE Exam | சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: வலுக்கும் கண்டனம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

CBSE தாள்கள் மிகவும் கடினமாக இருந்தன. ஆங்கில தாளில் உள்ள படித்து விடையளிக்கும் பகுதி முற்றிலும் அருவருப்பானது. இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சி செய்கிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத் தாளில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்ததற்கு கண்டனம் வலுத்துள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வின் ஆங்கில வினாத் தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக வாக்கியம் கொடுத்து விடையளிக்கும் பகுதி இடம் பெற்றிருந்தது. இதில், மனைவிமார்கள் வலுபெறுவது பெற்றோர் என்ற கட்டமைப்பை வலுவிழக்க செய்கிறது என்றும் இளம் தலைமுறையினர் தந்தையின் பேச்சை வேதவாக்காக மதிப்பதில்லை என்றும் முன்பு கணவர்களுக்கு மனைவிமார்கள் கீழ்படிந்து வந்த நிலையில் தற்போது அப்படியான சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குழந்தைகளையும், வேலையாட்களையும் அவர்களுக்கான இடத்தில் வைக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  பெண்களுக்கு எதிராக இடம்பெற்றிருந்த இந்த வாக்கியத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை  நடைபெற்ற பெரும்பாலான#CBSE தாள்கள் மிகவும் கடினமாக இருந்தன மற்றும் ஆங்கில தாளில் உள்ள படித்து விடையளிக்கும் பகுதி முற்றிலும் அருவருப்பானது.

இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் நசுக்க ஆர்எஸ்எஸ்-பாஜக சூழ்ச்சி செய்கிறது. குழந்தைகளே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.கடின உழைப்பு பலன் தரும். மதவெறி இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நம்பமுடியவில்லை! நாம் உண்மையில் குழந்தைகளுக்கு இந்த உந்துதலைக் கற்றுக்கொடுக்கிறோமா? பெண்களைப் பற்றிய இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆமோதிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். தனது பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய கல்வி அமைச்சர் அகியோரையும் அவர் டேக் செய்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தோ-பாக் யுத்தத்தின் 50வது ஆண்டு: பிபின் ராவத் பேசிய கடைசி உரை வெளியீடு

இதேபோல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோதிமணி, சிபிஎஸ்இ தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பெண்களை ஒடுக்குவதற்கான பிற்போக்கு கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும், சமத்துவம், சமநீதி ஆகியவை குறித்து அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எதிராகவும் வினாவில் கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் உள்ளன.  எனவே, இந்த வினாத்தாளை திரும்பபெற வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

First published:

Tags: CBSE, Rahul gandhi, Women