குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வழிமுறைகள் என்ன? உச்ச நீதிமன்றம் உத்தரவு

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வழிமுறைகள் என்ன? உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: January 25, 2020, 9:57 AM IST
  • Share this:
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை தாக்கல் செய்யுமாறு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவு போதிய பலனை தராததால், வேறு தீர்வு காண வேண்டும் எனக் கோரி, பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில், வேட்பாளர்களுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதை கேட்ட நீதிபதிகள், ஆர்.எஃப். நாரிமன், ரவீந்திர பட் அமர்வு, தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்