குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சட்டத்தின் படியும், நடைமுறையின் படியும் மனித உரிமைகள் நிலைநிறுத்தும் வகையில் சர்வதேச நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது.

Web Desk | news18
Updated: July 17, 2019, 9:05 PM IST
குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
குல்புஷன் ஜாதவ்
Web Desk | news18
Updated: July 17, 2019, 9:05 PM IST
குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியாக பணியாற்றிய குல்புஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானை உளவு பார்தத்தாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கில், பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து, அந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இந்தியாவின் பல பகுதிகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதுகுறித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மையும் நீதியும் வெற்றி பெற்றுள்ளது. குல்புஷன் ஜாதவ்-க்கு நீதி கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லா இந்தியர்களின் பாதுகாப்புக்காக எங்களது அரசு உழைக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘சட்டத்தின் படியும், நடைமுறையின் படியும் மனித உரிமைகள் நிலைநிறுத்தும் வகையில் சர்வதேச நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. ஒருமனதாக, வழங்கப்பட்ட தீர்ப்பு இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தீர்ப்பு குறித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ட்விட்டர் பதிவில், ‘குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வழக்கை, சர்வேத நீதிமன்றத்துக்கு முன் எடுத்துச் செல்ல முன்னெடுப்பு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச நீதிமன்றத்தின் முன் இந்த வழக்கை சிறப்பாக எடுத்துச் சென்ற ஹரிஷ் சால்வேக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...