மகாராஷ்டிரா மாநிலம் அம்போலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிஓஓ பதவியில் பணிபுரிந்து வருபவர் மணிஷ் காந்தி. இந்த நிறுவனத்தில் போலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 2016இல் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த பெண்ணிடம் மணிஷ் நெருங்கி பழகி அவரது அந்தரங்க புகைப்படங்களை கைப்பற்றியுள்ளார்.
பின்னர் அதை வைத்துக்கொண்டு பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். தனது பாலியல் இச்சைக்கு இணங்க வேண்டும் இல்லை என்றால் புகைப்படங்களை சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பரப்பி விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். வேலை நிமித்தமாக இந்தியாவின் பல ஊர்களுக்கும், ஜெர்மனி நாட்டிற்கும் அவர்கள் செல்ல வேண்டி இருந்துள்ளது.
அப்போதெல்லாம் பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த மணிஷ் அப்போதும் வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 6 ஆண்டுகாலம் இவற்றை வைத்து மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமையில் மணிஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவி பிரிந்த ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்த மருமகன்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு..!
இந்நிலையில், பாதிக்கப்பட்ட போலாந்து பெண்மணி மும்பை காவல் நிலையத்தில் மணிஷ் மீது புகார் அளித்துள்ளார். அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து FIR பதிந்துள்ளது. இதற்குள்ளாக மணிஷ் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறை தேடி வருகிறது. நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.