முகப்பு /செய்தி /இந்தியா / இதுதான் துப்பாக்கி.. செல்போன் கடையில் டெமோ செய்த போலீஸ்! சீறிப்பாய்ந்த குண்டு - ஊழியர் கவலைக்கிடம்!

இதுதான் துப்பாக்கி.. செல்போன் கடையில் டெமோ செய்த போலீஸ்! சீறிப்பாய்ந்த குண்டு - ஊழியர் கவலைக்கிடம்!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

செல்போன் கடையில் துப்பாக்கியை டெமோ காட்டிய போது பாய்ந்த குண்டு கடை ஊழியரைத் தாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலத்தில் செல்போன் கடையில் துப்பாக்கியை டெமோ காட்டிய போலீஸ்காரரின் துப்பாக்கியில் இருந்து தவறுதலாக பாய்ந்த குண்டால் கடை ஊழியர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போன் கடையில் அவரின் துப்பாக்கியை அங்கு உள்ள ஊழியர்களுக்கு முன்னிலையில் காட்டு விவரித்துள்ளார். அப்போது தூப்பாக்கியை திருப்பி பிடிக்கும் போது தவறுதலாக குண்டு எதிரில் உள்ள ஊழியர் போல் பாய்ந்துள்ளது.

அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பஞ்சாப் காவலர் துப்பாக்கியை உறையில் இருந்து எடுத்து ஊழியர்கள் மத்தியில் விவரிப்பது தெரிகிறது. மேலும் துப்பாக்கி குண்டு எதிரில் பாய்ந்ததும் தெரிகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, அந்த காவலரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு பாய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தீ விபத்தில் தரைமட்டமாக மசூதி கோபுரம்- வீடியோ காட்சி

இது குறித்து காவல் உதவி ஆணையர் வரீந்தர் சிங் தெரிவிக்கையில், சம்பவ இடத்தில் உள்ள ஊழியர்களின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிபடையில் தூப்பாக்கியை விதிகள் மீறி உபயோகித்த காவல் அதிகாரி மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Gun fire, Police, Punjab