கேரள மாநில காவல் துறையில் டெலிகம்யூனிகேஷன் எஸ்.பி ஆக இருப்பவர் நவநீத் சர்மா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நவநீத் சர்மாவுக்கு டெலிகம்யூனிகேஷன் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் இருந்து தலா ஒரு கன்மேன் வீதம் இரண்டு பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஆயுதப்படை கன்மேனாக இருந்தவர் ஆகாஷ். ஆகாஷ் பணியில் இருந்த சமயத்தில் நவநீத் சர்மாவின் வீட்டில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கன்மேன் ஆகாஷை அழைத்து, எஸ்.பி-யின் வீட்டு நாயை குளிப்பாட்ட வேண்டும் எனவும், நாயின் கூண்டுக்குள் கிடக்கும் அதன் கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். கன்மேன் ஆகாஷ் "அது எனது வேலை கிடையாது" என கூறி நாயை குளிப்பாட்ட மறுத்துள்ளார். மேலும் தான் பணியில் இருக்கும் கார்ட் அறையில் இருந்து வரமுடியாது எனவும் கூறியுள்ளார்.
இதுபற்றி எஸ்.பி நவநீத் சர்மாவின் காதுகளுக்கு கொண்டுசென்றுள்ளார் வடமாநில வேலைக்காரர். இதனால் கோபமான எஸ்.பி, டெலிகம்யூனிகேஷன் எஸ்.ஐ-யை அழைத்து "கன்மேன் ஆகாஷ் எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக ஒரு ரிப்போர்ட் எழுதிக்கொடுங்கள்" என கேட்டுள்ளார். உயர் அதிகாரி கூறியதால் வேறு வழி இல்லாமல் பொய் ரிப்போர்ட் எழுதி கொடுத்துள்ளர் எஸ்.ஐ. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் கன்மேன் ஆகாஷை சஸ்பெண்ட் செய்துள்ளார் எஸ்.பி நவநீத் சர்மா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனக்கு நேர்ந்த அநீதி பற்றி கேரள மாநில போலீஸ் அசோசியேஷனை சேர்ந்தவர்களிடம் புகார் அளித்துள்ளார் கன்மேன் ஆகாஷ். இதுபற்றி காவல்துறை சங்கத்தினர் டி.ஜி.பி-யின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுபற்றி விசாரணை நடத்தும்படி ஐ.ஜி அனூப்குருவிளா ஜான் என்பவருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி. ஐ.ஜி நடத்திய விசாரணையில் கன்மேன் ஆகாஷ் மீது தவறு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து எஸ்.பி நவநீத் சர்மா பிறப்பித்த சஸ்பெண்ட் ஆர்டரை அதே நாளில் ரத்து செய்தார் ஐ.ஜி அனூப்குருவிளா ஜான். மேலும் கன்மேன் ஆகாஷை திருவனந்தபுரம் சிட்டி போலீசில் பணியமர்த்தினார். எஸ்.பி-யின் நாயை குளிப்பாட்டி அதன் கழிவுகளை அள்ள மறுத்த கன்மேனின் உறுதியான செயல்பாட்டுக்கு சக போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.