12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய காவல்துறை! சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தடை

12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய காவல்துறை! சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தடை
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:46 PM IST
  • Share this:
சபரிமலைக்கு ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற 12 வயது சிறுமியை காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17-ந்தேதி முதல் மண்டல பூஜை விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜை விழாவும் ஆரம்பமாகும். இரு விழாக்களுக்காகவும் சபரிமலை கோவில் சுமார் 2 மாதங்கள் திறந்திருக்கும். கடந்த ஆண்டு இந்த விழாக்களின்போது சபரிமலைக்கு ஏராளமான இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகு தற்போது இரண்டாவது முறையாக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.


கடந்த முறை அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய பினராயி விஜயன் அரசு தற்போது அனுமதி மறுத்துவருகிறது. இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் பெலூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவுடன் சேர்ந்து அவரது பெற்றோர் உறவினர்களுடன் ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பெண்கள் அனைவரும் அவர்களின் வயது சான்று மற்றும் ஆதார் கார்டு நகல்களைக் கொண்டு வரவேண்டும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த இரண்டு தினங்களில் 10 முதல் 50 வயதுகுட்பட்ட 10 பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Also see:

 
First published: November 19, 2019, 2:46 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading