மாற்றான் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்த போலீஸ் எஸ்ஐக்கு தர்ம அடி விழுந்தது. காயமடைந்த எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய எஸ். ஐ. ஷேக் சபீக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ரகசிய தொடர்பு இருந்து வந்தது.
இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டார்.
இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த பெண்ணின் கணவர் வேலை விசயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
கிடைத்தது சந்தர்ப்பம் என்று கருதிய அவருடைய மனைவி உடனடியாக தன்னுடைய கள்ளக்காதலன் எஸ்.ஐ. ஷேக் சபீக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.

Wanaparthy SI
அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை கவனித்து கொண்டிருந்த பெண்ணின் கணவர் எஸ் ஐ ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சென்று கதவை தட்டி திறக்க செய்து எஸ் ஐ ஷேக் சபீயை கடுமையாக தாக்கினார். குறுக்கிட்ட மனைவிக்கும் தர்ம அடி விழுந்தது.
Also read:
தங்கம் என்று நினைத்து எரிகல்லை வீட்டில் வைத்திருந்த நபர்? நடந்தது என்ன?
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ம அடி வாங்கி படுகாயமடைந்த எஸ்.ஐ யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.