’வீட்டுக்கு தனியா வா... கேஸ் போட மாட்டேன்...’ இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில், வீட்டில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பெண்மணியை படுக்கைக்கு அழைத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

’வீட்டுக்கு தனியா வா... கேஸ் போட மாட்டேன்...’ இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்
கோப்புப் படம்
  • Share this:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளம் அருகே உள்ள துங்கபேட்டா கிராமத்தில் அப்பாராவ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பாராவின் மகளை நோட்டமிட்ட உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணா தந்தை, மகள் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த பெண்ணின் செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு இருவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

படிக்க...2 பேத்திகள், 2 வளர்ப்பு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று மகளுடன் பெண் தற்கொலை - பட்டுக்கோட்டையில் பகீர் சம்பவம்


பின்னர் அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட ராமகிருஷ்ணா, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தனது வீட்டிற்கு தனியாக வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் ராமகிருஷ்ணாவுடனான செல்போன் உரையாடல்களை பதிவுசெய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
First published: August 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading