இங்கயுமா செஃல்பி?: திகார் சிறைக்கு செல்லும் முன் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் அட்ராசிட்டி!

டெல்லி போலீசாருடன் செல்ஃபி எடுத்த சுஷில்

சுஷில் குமாரை திகார் சிறைக்கு டெல்லி காவல்துறையினர் மாற்றினர். ஆனால் இதற்கிடையே சுஷில் குமாருடன் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், அதிகாரிகள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

  • Share this:
கொலை வழக்கில் கைதாகியிருக்கும் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருடன் டெல்லி காவல்துறையினர் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் சுஷில் குமார் சிரித்தபடி போஸ் கொடுப்பதும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே வீரராக சாதனை படைத்த பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான 23 வயது சாகர் தங்கர் என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் 4ம் தேதி இரவில் டெல்லி சத்ரசால் விளையாட்டரங்கில் மோதல் ஏற்பட்டது. இதில் சுஷில் தரப்பினர் தாக்கியதால் மோசமாக காயமடைந்து சிகிச்சையில் இருந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலை குற்றமாக மாற்றப்பட்ட இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சுஷில் குமார் சேர்க்கப்பட்ட நிலையில் அவரும், அவரது நண்பர்களும் தலைமறைவாகினர். பின்னர் மே 23ம் தேதியன்று சுஷில் குமாரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சுஷில் குமாரின் நீதிமன்ற காவலை ஜூலை 9ம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. மேலும் அவரை திகார் சிறைக்கு மாற்றவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read:   கொரோனா பயங்கரம்: நோய்த்தொற்று அச்சத்தால் 5 வயது மகளை குத்திக் கொலை செய்த தாய்!

இதனையடுத்து இன்று சுஷில் குமாரை திகார் சிறைக்கு டெல்லி காவல்துறையினர் மாற்றினர். ஆனால் இதற்கிடையே சுஷில் குமாருடன் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், அதிகாரிகள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.சிவப்பு டி-ஷர்ட்டில் சுஷில் குமார், முகக்கவசம் இன்றி அதில் புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். அவரின் அருகே சில காவலர்கள் சிரித்தபடி போஸ் தருகிறார்கள், மேலும் மஞ்சள் நிறத்தில் டி-ஷர்ட் அணிந்த ஒரு காவலர் கையில் துப்பாக்கியுடன் அந்த புகைப்படத்திற்கு போஸ் தந்துள்ளார். இந்த புகைப்படத்தை போலீஸ் ஒருவர் அவரின் மொபைலில் படம் பிடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இந்த புகைப்படங்களில் இணையத்தை கலங்கடித்து வருகின்றன. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் டெல்லி காவல்துறையினர் செய்யும் செயலா இது எனவும், கொஞ்சம் கூட பயமின்றி சுஷில் இப்படி சிரிக்கிறாரே எனவும் பலவாறு சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: