ஹோம் /நியூஸ் /இந்தியா /

'பறந்து வந்த கல்.. ஓரம் நின்ற 4 பேர்..' வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய சம்பவம்.. வெளியான சிசிடிவி!

'பறந்து வந்த கல்.. ஓரம் நின்ற 4 பேர்..' வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய சம்பவம்.. வெளியான சிசிடிவி!

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

இந்த ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2 முறை கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கற்களை வீசும் காட்சி சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதால், அவர்களை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில், ஹவுரா முதல் புதிய ஜல்பைகுரி பகுதி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் மீது கடந்த 2 நாட்களில் 2 முறை கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் இளைஞர்கள் 4 பேர் ரயில் மீது கற்களை வீசும் காட்சி பதிவாகியுள்ளது. இதைக்கொண்டு போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


First published:

Tags: Vande Bharat