சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்; உள்ளே இருந்தவர்கள் நிலை என்ன?

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்; உள்ளே இருந்தவர்கள் நிலை என்ன?

டெல்லி துவாரகாவில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளித்தில் சிக்கி கவிழ்ந்தது.

  • Share this:
    நண்பரை சந்திக்க சென்ற காவலர் ஒருவரின் கார் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதேபோல், இடைவிடாது பெய்த கனமழையால், மக்கள் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டனர்.



    அந்தவகையில், டெல்லி துவாரகாவில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளித்தில் சிக்கி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் காரை ஓட்டிய நபருக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    Also read: 500 ரூபாய் செலவில் எளிமையான திருமணம்: பொண்ணு மாஜிஸ்திரேட்.. மாப்பிள்ளை ராணுவ மேஜர்...!

    தகவல்களின்படி, டெல்லியை சேர்ந்த காவலர் அஸ்வானி குமார் தனது நண்பரை சந்திப்பதற்காக இன்று மாலை தனது ஐ10 காரில் சென்றுள்ளார். அப்போது அவர் துவாரகாவில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தடீரென ​சாலை உடைந்து பள்ளம் விழுந்ததால் சாலையில் சென்ற காரும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற காவலர் அஸ்வானி குமாரும் காருக்குள் சிக்கிக்கொண்டார்.

    இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து வெளியே இழுத்தனர். இதில், சிறிய காயங்களுடன் காரை ஓட்டிச்சென்ற காவலர் அஸ்வானி குமார் நலமாக உள்ளார்.

    இந்த விபத்து நடந்த நேரத்தில் சாலையில் ஒரு பெரிய கூட்டம் கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Esakki Raja
    First published: