Home /News /national /

மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு.. கதறி அழுத போலீஸ் -வைரலான வீடியோ

மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு.. கதறி அழுத போலீஸ் -வைரலான வீடியோ

போலீஸ்

போலீஸ்

வீடியோ வைரலான நிலையில், தரமற்ற உணவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு தங்களுக்கு வழங்கப்படுவதாக, காவலர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டும் கதறியும் அழுத வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். உத்தர பிரதேசத்தில் காவல்துறையினருக்கு வழங்கும் உணவு தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.  காவலர் மனோஜ்குமார், ரொட்டிகள் அடங்கிய தட்டை கையில் ஏந்தி, காவல் நிலையத்தில் இருந்து கதறி அழுதவாறே சாலையில் ஓடி வந்தார்.

    தொடர்ந்து, சாலையின் மத்தியில் அமர்ந்து அரசு தங்களிடம் 12 மணி நேரம் வரை வேலை வாங்குவதாகவும், ஆனால் தரமான உணவு வழங்குவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். காவல் அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும், தொடர்ந்து அழுதவாறே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


    இந்த வீடியோ வைரலான நிலையில், தரமற்ற உணவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, புகார் எழுப்பிய  காவலர் மனோஜ்குமாருக்கு எதிராக பல்வேறு புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Police, Uttar pradesh

    அடுத்த செய்தி