Home /News /national /

புதுச்சேரி முதல்வரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்.. ஆளுநர் தமிழிசை நடவடிக்கை

புதுச்சேரி முதல்வரை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்.. ஆளுநர் தமிழிசை நடவடிக்கை

Puducherry CM Rangasamy  கோவில் தேர் திருவிழாவில்  முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரியை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்.

Puducherry CM Rangasamy கோவில் தேர் திருவிழாவில்  முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரியை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்.

Puducherry CM Rangasamy கோவில் தேர் திருவிழாவில்  முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிவிட்ட பாதுகாப்பு அதிகாரியை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் அமைச்சர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வரும் பொழுது துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி உடன் வந்தார். அப்பொழுது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வந்தார். அவருக்கு வழிவிடும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர், முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டார்.

இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி சென்ற முதல்வர் ரங்கசாமி சுதாரித்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. மேலும் இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இன்று அரசு பணியாளர் கூட்டமைப்பினர் அதன் தலைவர் சரவணன் தலைமையில் 50 பேர் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி திடீர் ஊர்வலம் மேற்கொண்டனர்.

முதல் அமைச்சரை தள்ளிய பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டு தடையை மீறி  ஆளுநர் மாளிகை முன் சென்றனர். அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்தனர்.அப்போது அங்கு வந்த பெரிய கடை காவல் ஆய்வாளர் கண்ணன் அவர்களை அடித்து இழுந்து குண்டு கட்டாக தூக்கி தடுப்பு கட்டைகளை தாண்டி வந்து விட்டனர்.

இதனால் அங்கு 30 நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்த 6 மணிநேரத்திற்கு பின் முதல்வரை தள்ளிவிட்ட உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஆயுத படைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜசேகரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை தலைமையகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Also Read : 10ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதத்தில் ஜஸ்ட் பாஸ் - வைராலகும் சாதனை ஐஏஎஸ் அதிகாரியின் மார்க் ஷீட்

இதற்கிடையே முதல்வர் தள்ளிவிட்ட விவகாரம் குறித்து துணைநிலை ஆளுநர் செயலகம்  விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த 11ம் தேதி  வில்லியனூரில் நடைபெற்ற திருக்காமேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின் போது, ஒரு முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரி, பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவாக செயல்பட்டதாக துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரியின் நடத்தை குறித்து உடனடியாக விசாரணை செய்து விளக்கம் அளிக்க, காவல்துறை இயக்குநருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையூறு இல்லாமல், சரியாகத் திட்டமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலுக்குப்பின், விசாரணை நடத்தி குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரியை புதுச்சேரி ஆயதப் படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Puducherry, Tamilisai Soundararajan

அடுத்த செய்தி