பெண் காவல் அதிகாரியை தீ வைத்துக் கொளுத்திய ஆண் காவல் அதிகாரி!

அப்போது போக்குவரத்து காவல்துறை அதிகாரி அஜஸ் என்பவர் காரில் சென்று சௌமியா சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதினார்.

news18
Updated: June 15, 2019, 8:38 PM IST
பெண் காவல் அதிகாரியை தீ வைத்துக் கொளுத்திய ஆண் காவல் அதிகாரி!
மாதிரிப் படம்
news18
Updated: June 15, 2019, 8:38 PM IST
கேரளாவில் பெண் காவல் அதிகாரி ஒருவரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். அதில், பெண் காவல்துறை அதிகாரி உடல் கருகி உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் வாலிகுன்னம் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவந்தார் சௌமியா புஷ்பாகரன் என்ற பெண் பணியாற்றிவந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் வெளிநாட்டில் பணியாற்றிவருகிறார்.

34 வயதான அவர், இன்று பணிமுடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து காவல்துறை அதிகாரி அஜஸ் என்பவர் காரில் சென்று சௌமியா சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதினார். அதனால், சௌமியா கீழே விழுந்தார்.

காரிலிருந்து கத்தியுடன் இறங்கிய அஜஸைக் கண்டு சௌமியா பயந்து ஓடியுள்ளார். அவரை, வளைத்துப் பிடித்த அஜஸ், அவர் மீது பெட்டோரோலை ஊற்றிக் கொளுத்தினார். அதில், தீப்பற்றி அவர் உயிரிழந்தார். பெட்டோல், அஜீஸ் மீதும் பட்டதால், அவரும் கடுமையான தீக்காயத்துக்குள்ளானர்.

காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.

Also see:

First published: June 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...