கேரளா மாநிலத்தில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேலக்கம் பகுதியில் ஒரு காய்கறி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்றனர்.
அப்போது தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வைக்கப்பட்டுள்ள தொட்டி அருகே ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன. அந்த நோட்டுக்கள் தண்ணீரில் மிதந்தபடி இருந்தன. இதை கண்ட தொழிலாளிகள் தோட்ட உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க : உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இடத்தின் உரிமையாளர் விரைந்து வந்து பார்த்த போது, தண்ணீரில் மிதந்த சில நோட்டுக்கள் தீயில் எரிந்து கருகி இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நோட்டுக்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.
ஆய்வில் தண்ணீரில் மிதந்த நோட்டுகள் கள்ளநோட்டுக்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கள்ளநோட்டுக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கள்ளநோட்டுக்களை தோட்டத்தில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் கள்ளநோட்டுக்கள் கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fake Note, Indian Rupee, Kerala