Home /News /national /

கணவருடன் பிரச்னை என போலீஸ் நிலையம் சென்ற பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்த இன்ஸ்பெக்டர்!

கணவருடன் பிரச்னை என போலீஸ் நிலையம் சென்ற பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்த இன்ஸ்பெக்டர்!

Police

Police

பெண்ணின் கணவருக்கே போன் செய்து உன் மனைவியை அழைத்து வராவிட்டால் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியிருக்கிறார் ஆய்வாளர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போலீஸ் நிலையம் சென்ற இளம் பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அவரின் வாழ்க்கையை நாசப்படுத்திய சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த ஆண்டு இறுதியில் சக்ராநகர் பகுதியைச் சேர்ந்த நபருடன் திருமணம் ஆகியிருந்தது. புதுமண தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படவே கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தன் கணவர் மீது புகார் அளிக்க காவல்நிலையம் சென்ற அந்த இளம்பெண், ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரை பெற்ற அந்த ஆய்வாளர் இட்டாவா நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்வதாக கூறி அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு லாட்ஜ் ஒன்றுக்கு சென்று கூட்டிச் சென்று, அங்கு ஓட்டல் அறையில் வைத்து அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் அச்சம்பவத்தை தனது மொபைலில் போட்டோவாகவும், வீடியோவாகவும் தனது எடுத்து வைத்துக் கொண்டார்.

Also read:  பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய நிஜ பாஸ்போர்ட்.. இதெப்படி சாத்தியம்?

இந்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி மிரட்டி அந்த பெண்ணை வர வரவழைத்து பல முறை பல இடங்களுக்கு வரவழைத்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார் அந்த ஆய்வாளர். மேலும் அதிகாரத்தில் இருக்கும் நபரிடம், தான் சம்பந்தப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததால் அந்த பெண்ணுக்கு வேறு வழிதெரியவில்லை.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணின் கணவருக்கே போன் செய்து உன் மனைவியை அழைத்து வராவிட்டால் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

Also read: காற்றுமாசு குறித்து அக்கறையிருந்தால் வாகனங்களை புறக்கணியுங்கள், குழந்தைகள் பட்டாசு வெடிக்கட்டும் – சத்குரு

இந்நிலையில் அந்த காவல் ஆய்வாளரின் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாத பெண்ணின் தந்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த காவல் ஆய்வாளர் குறித்த விஷயங்கள் அம்பலமாகியுள்ளன.

இது குறித்து இட்டாவா சீனியர் காவல் கண்காணிப்பாளர் ஜெய் குமார் சிங் கூறுகையில், முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மகோபா மாவட்டம் குல்பாகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அந்த ஆய்வாளரை இட்டாவா வரவழைத்துள்ளோம். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பெண்ணின் வாக்குமூலத்தை மேஜிஸ்திரேட்டிடம் பதிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 
Published by:Arun
First published:

Tags: Atrocities of Police, Rape, Uttar pradesh

அடுத்த செய்தி