ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

க்ரைம்

க்ரைம்

மருத்துவமனை பிணவறையில் பெண் பிணங்களின் நிர்வாணப் புகைப்படங்களை அங்கு பணிபுரியும் ஊழியர் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் மடிக்கேரி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கடகதாலு பகுதியைச் சேர்ந்த வாலிபர் 30 வயதான சையத் ஹுசைன். இவர் 2021ஆம் ஆண்டு கொரோனா முன்கள பணியாளராக மடிக்கேரி அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியராக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சையத் அம்மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  கைதான சையத் சில நாள்களுக்கு முன்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் இருந்து செல்போன் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்த நிலையில், அதை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான் பகீர் தகவல்கள் வெளியாகின.

  சையத் தான் வேலைப் பார்த்த பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். மேலும், அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் அன்புடன் நட்பாக பழகி நெருக்கத்தை வர வழைத்துள்ளார்.

  இதையும் படிங்க: தரமற்ற சாலைகளை போட்ட அதிகாரிகள்... ஆத்திரத்தில் சாலைகளை வெறும் கைகளில் பெயர்த்து எடுத்த மக்கள்..!

  மேலும், அவரிடம் நெருக்கமான பெண் ஊழியர்களிடம் சையத் ஆபாசமாகப் பேசி, பழகிவந்தது செல்போனின் ஆடியோ, வீடியோக்களாக பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலமான நிலையில், பிணையில் வெளியே வந்த சையத் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அத்துடன் மடிக்கேரி மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Karnataka, Sexual abuse