Home /News /national /

யாசகம் கேட்ட முதியவரை குளிப்பாட்டி உணவு வழங்கிய காவல் அதிகாரி..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..

யாசகம் கேட்ட முதியவரை குளிப்பாட்டி உணவு வழங்கிய காவல் அதிகாரி..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..

ஊனமுற்ற  முதியவருக்கு  உதவிய போலீசார்.

ஊனமுற்ற  முதியவருக்கு  உதவிய போலீசார்.

Viral Video | நீண்ட நாட்கள் குளிக்காமல் பலரும் அருகே நெருங்க தயங்கும் நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் உதவி நாடி வந்த ஊனமுற்ற  முதியவருக்கு  உதவிய போலீசார்.

நம் வாழ்வில் பலவித மனிதர்களை கடந்து வந்திருப்போம். சிலர் போகிற போக்கில் ஒரு நல்லது என்று பலனை எதிர்பாராமல் நல்லது செய்துவிட்டு செல்வர். அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது. மனித நேயம் மரணிக்கவில்லை என்பதற்கு இந்த போலீஸ்காரர் ஓர் எடுத்து காட்டு.

கேரளா மாநிலம்  நெய்யாற்றின்கரை காவல்நிலையத்தில் சிவில் போலீஸ் அதிகாரியான விராலியைச் சேர்ந்த ஷைஜு, செய்த செயல் பிற மனிதர்களுக்கு முன்னுதாரணமாக பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வந்த மாற்றுத்திறனாளி யாசகர் முதியவர் ஒருவர்.  பலரிடம் கை நீட்டி சோப்பு வாங்கித் தரலாமா என்று கேட்டு கொண்டே நடந்து சென்ற அந்த யாசகர் கடைசியாக நெய்யாற்றின்கரை ஆலும்மூடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஷைஜூவிடம் வந்து சோப்பு வாங்கி தரலாமா, குளித்து ரொம்ப நாட்கள் ஆயிடிச்சு என்று கேட்டார்.

அவர்  கேட்டவுடனே ஷைஜு அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து சோப்பை வாங்கி முதியோரிடம் கொடுத்துள்ளார்.  உடனே அந்த முதியவர் சோப்புடன் அருகில் உள்ள பொது குடிநீர் குழையின் அருகே  சென்று  குளிக்க முயற்சிப்பதை ஷைஜு கவனித்தார். மேலும் ஊனமுற்ற முதியவர் உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க முடியாமல் அவதியடைந்துள்ளார். இதனை பார்த்த உடனே ஷைஜு, பக்கத்து கடையில் இருந்து வாளியும் கோப்பையும் வாங்கி வந்து அந்த முதியவரைக் குளிக்க வைத்து, புது உடை மற்றும் உணவும் வாங்கி  கொடுத்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் செய்தியாளர்கள் இதனை படம் பிடித்து செய்தி ஆக்க அங்கு வந்ததும், அவர்களிடம் தான் செய்தது தனது  வேலையின் ஒரு பகுதி எனவும் தனது கடமை என்றும்  எளிதாக  சொல்லிவிட்டுச் சென்றார்.

Read More : தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?


ஷைஜு செய்த இந்த செயல் ஒட்டு மொத்த காவல்துறைக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
பலரும் கண்டும் காணாமலும் சென்ற நிலையில் ஷைஜு செய்த இந்த செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்கள் குளிக்காமல் பலரும் அருகே நெருங்க தயங்கும் நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் உதவி நாடி வந்த ஊனமுற்ற  முதியவருக்கு  உதவிய ஷயஜு என்ற போலீசாரை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

கேரளா காவல்துறைக்கு பெருமை சேர்த்த இவரின் இந்த செயல் மனித நேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூட என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நெகிழ்ச்சிகர சம்பவத்தை பார்த்த பொது மக்கள் சிலர் இதனை தங்களது போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: India, Kerala

அடுத்த செய்தி